தேவர் வாழ்ந்து மறைந்த வீட்டை நினைவிடமாக மாற்றக்கோரி முற்றுகைப் போராட்டம்

திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் வட்டம், திருநகர் பசும்பொன் தெருவில் இந்திராகாந்தி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே உள்ள இல்லத்தில் தான் முத்துராமலிங்கத்தேவர் கடைசிக் காலத்தில் வாழ்ந்து மறைந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in