‘லஞ்சம் வாங்குபவர்களை ஏன்? தூக்கிலிட கூடாது’ உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கருத்துக்கு விவசாயிகள் வரவேற்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கருத்தை வரவேற்று இனிப்பு வழங்கிய விவசாயிகள்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கருத்தை வரவேற்று இனிப்பு வழங்கிய விவசாயிகள்.
Updated on
1 min read

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் களை ஏன்? தூக்கிலடக் கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் கருத்தை வரவேற்று உழவர் பேரவை சார்பில் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “தஞ்சைக்கு இணையாக நெல் உற்பத்தியில் தி.மலை மாவட்டம் உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை, அரசு நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென் றால், எடை போடுவதில் ஊழியர் கள் லஞ்சம் பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவது தொடர்கிறது.

“நெல் கொள்முதல் நிலையங் களில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் ஊழியர்களை ஏன்? தூக்கி லிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித் துள்ளது. இதனை விவசாயிகளா கிய நாங்கள் வரவேற்கிறோம். அப்படி இருந்தும், தி.மலை மாவட்டத்தில் எடை போடுவதற்கு லஞ்சம் பெறப்படுகிறது. எனவே, நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபடும் தற்காலிக பணியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், அதற்கு துணை போகும் நிரந்தரப் பணியாளர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சைக்கு இணையாக தி.மலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றார். இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in