நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published on

அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. போனஸ் தொகையை உயர்த்தி அறிவிக்கக் கோரி, நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. குன்னூரில் சுமை தூக்குபவர்கள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் துரைராஜ் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in