வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீட்டில்  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Published on

நாமக்கல் பேளுக்குறிச்சியில் உள்ள வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன். வேலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊராட்சிகள் உதவி இயக்குநர் செந்தில்வேலன் வீடு நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ளது.

அவரது வீட்டில் நேற்று காலை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். காலை தொடங்கிய சோதனை இரவு 8 மணியைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in