திருச்சி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இன்று 7 இடங்களில் குறைதீர் முகாம்

திருச்சி மாவட்டத்தில்  காவல்துறை சார்பில் இன்று 7 இடங்களில் குறைதீர் முகாம்
Updated on
1 min read

திருச்சி மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்திலுள்ள காவல்துறை சார்ந்த உட் கோட்டங்கள் வாரியாக பொதுமக்கள் குறைதீர் முகாம் நவ.8-ம் தேதி (இன்று) நடத்தப்பட உள்ளது. இதன்படி ஜீயபுரம் உட்கோட்டம் சார்பில் ஜீயபுரம் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் ஆகிய இடங்களிலும், திருவெறும்பூர் உட்கோட்டம் சார்பில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம், லால்குடி உட்கோட்டம் சார்பில் சமயபுரம் ஜெயந்தி மகால், முசிறி உட்கோட்டம் சார்பில் முசிறி வி.ஐ.பி மகால், மணப்பாறை உட்கோட்டம் சார்பில் மணப்பாறை காவல் நிலையம் ஆகிய இடங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெறும். இவற்றில் அந்தந்த உட்கோட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறை சார்ந்த தங்களது குறைகள், புகார்களை முறையிட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in