கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் காமராஜர் நகரைச் சேர்ந்த தாசன் மகன் வர்கீஸ்(45). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாளை. மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மாலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.