Regional02
தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் திறப்பு
விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தை ஆட்சியர் இரா.கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது: இம்மையம் மூலம் விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் சோதனைகள் வாயிலாக அவர்களின் கல்வித் தகுதி, திறன் மற்றும் மனநல அடிப் படையில் அவர்களுக்கு ஏற்ற துறைகளைத் தேர்வு செய்யவும், அத்துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
