வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக வேல் யாத்திரை: எம்எல்ஏ குற்றச்சாட்டு

வாக்கு வங்கி அரசியலுக்காக  பாஜக வேல் யாத்திரை: எம்எல்ஏ குற்றச்சாட்டு
Updated on
1 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடத்துவது சரியான நடைமுறைஅல்ல. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பாஜகசெயல்படுவதில்லை. தங்களது விருப்பத்துக்கேற்ப தடாலடியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசியல் வலிமை பெறவும், வாக்குவங்கிக்காகவும் வேல் யாத்திரை நடத்துகிறது. ஆனால், தமிழக மக்களிடையே இது செல்லுபடியாகாது.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில்தமிழக ஆளுநர் காலம்தாழ்த்துவது மக்களைகோபத்துக்கு உள்ளாக்கும் நிலையாகும். தமிழகஅரசியலில் திமுக, அதிமுக மட்டும் தான் கூட்டணிகளுக்கு தலைமைதாங்க முடியும். மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைப்பதாக கூறுவது மறைமுகமாக யாருக்கோ ஆதரவுஅளிப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வரக்கூடாதுஎன்பதற்காகவும் சொல்வதுபோல் உள்ளது.நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்தியமுஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கடையநல்லூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in