நிலம் கொடுத்தோருக்கு வேலை வழங்கக்கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நிலம் கொடுத்தோருக்கு வேலை வழங்கக்கோரி  சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Updated on
1 min read

அரியலூர் அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் தோண்டி எடுக்க கடந்த 1982-ம் ஆண்டு 161 விவசாயிகளிடமிருந்து 270 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.

அப்போது, நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் சிமென்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிலம் கொடுத்ததில் 57 குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை. எனவே, கல்வித் தகுதியின் அடிப்படையில் 57 குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கு வேலை வழங்கக் கோரி, ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆலை பொது மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் இரும்புலிக்குறிச்சி போலீஸார், இதுகுறித்து நாளை (இன்று) அரியலூர் சிமென்ட் ஆலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in