சாத்தான்குளம் அருகே ரூ.15,000 கோடியில் தனியார் தொழிற்பேட்டை பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதூர் பேரூராட்சியில் புனரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  திறந்து வைத்து, விளக்கேற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு.
புதூர் பேரூராட்சியில் புனரமைக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து, விளக்கேற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ரூ.15 ஆயிரம் கோடி திட்ட மதீப்பிட்டில் 1,400 ஏக்கரில் தனியார் தொழிற்பேட்டை அமைகிறது. இதற்கான பணிகளை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தொடங்கி வைத்தார்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட வடலிவிளை பகுதியில் இந்தியன் பவர் புராஜெக்ட்ஸ் லிமிடெட், விகாஷ் இன்டஸ்ட்ரியல் பார்க் பிரைவேட் லிமிடெட் ஆகியநிறுவனங்களின் சார்பில் ரூ15 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ஏரோஸ்பேஸ் மற்றும் இன்டஸ்டிரியல் பார்க் அமைக்கப்பட உள்ளது.

இதில் ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், மருத்துவமனை, இலவச கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமையவுள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 3,000 பேருக்கு நேரடியாகவும், ஏராளமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பேட்டை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவடலிவிளை பகுதியில் நடைபெற்றது. தொழிலபதிபர்கள் மோகன், செல்லாபிரசாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி

நிகழ்ச்சிகளில், எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, ஒன்றியக்குழு தலைவர்கஸ்தூரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அனிதா, ஊராட்சித் தலைவர் அய்யாத்துரை கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in