விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் போனஸ் கேட்டு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா

கடலூர் கேப்பர் மலையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் கேப்பர் மலையில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் குத்தகைக்கு விடக்கூடாது, கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூர் கேப்பர் மலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொமுச மாநில துணைப் பொதுச் செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிஐடியூ மாவட்ட சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன், சம்மேளனம் மாவட்ட தலைவர் ரமேஷ், தொமுச மாவட்ட பொருளாளர் தர், ஏஐடியூசி மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐஎன்டியூசி மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

விழுப்புரம்

இதே போல் கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ மாநில துணை தலைவர் ஜெயபிரகாஷ் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் செந்தில் தர்ணா போராட் டத்தை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in