

மதுரை மாவட்டம் அங்காடிமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). திருமணம் ஆனவர். சிலைமான் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 8 வயது சிறுமியிடம் இவர் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது. சிறுமி சத்தம் போட்டதால் பயந்துபோன காவலர் அங்கிருந்து தப்பி ஓட்டிவிட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செந்தில்குமார் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். போலீஸ்காரர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைதானது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.