சேரன்மகாதேவி அருகே முதியவர் கொலை

சேரன்மகாதேவி அருகே முதியவர் கொலை

Published on

சேரன்மகாதேவி அருகே உள்ளஇடையன்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகனி(65). இவரது தம்பிடேனியல்(58). கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வகனிக்கு ரூ.10 ஆயிரத்தை டேனியல் கொடுத்திருந்தார். இந்த பணத்தை திருப்பி கேட்டது தொடர்பாக சகோதரர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அவர்களிடையே மீண்டும்தகராறு ஏற்பட்டது. செல்வகனி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சேரன்மகாதேவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in