தி.மலை அடுத்த ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் இல்ல திருமண விழா

ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் கே. தருமராஜ் மகள் டி.சங்கீதா - எஸ்.உதயகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் கே. தருமராஜ் மகள் டி.சங்கீதா - எஸ்.உதயகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலையில் நடை பெற்றது.

திருவண்ணாமலை அ.தி.மு.க. ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்றத் தலைவருமான கே. தருமராஜ்- சுமதி ஆகியோரது மகள் டி.சங்கீதாவுக்கும், ஆணாய்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த வி.சோலை- செல்வி ஆகியோரது மகன் எஸ்.உதய குமாருக்கும் கடந்த 30-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, அவர்களது வரவேற்பு விழா, திருவண்ணா மலையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினார்.

இதில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எஸ்.ராமச் சந்திரன், தி.மலை ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி, நகர செயலாளர் ஜே.செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இ.என்.நாராயணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில்குமார், கலை இலக்கிய பிரிவு மாவட்டத் தலைவர் பழனி, கரிப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பண்டிதப்பட்டு ராஜாத்தி, காட்டாம்பூண்டி அமுதா அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.கலியபெருமாள், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் எம். அய்யனார்,  ரமணா என்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் தாரகேஸ்வரர் டிராக்டர்ஸ் ஜி.பழனி, தேவி, எஸ்.பிரசன்னா, சுப உட்பட பலர் கலந்துகொண்டனர். கே.தருமராஜ்- சுமதி, டி.பெரு மாள், வி.சோலை- செல்வி, வி.வன்னியராஜா ஆகியோர் அனைவரையும் வரவேற்று நன்றி கூறினர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in