

தி.மலை மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 571 மனுக்கள் பெறப்பட்டது.
தி.மலை மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் அலு வலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் கந்த சாமி தலைமை வகித்தார். பட்டா மாற்றம், வங்க கடனுதவி, உதவித்தொகை மற்றும் பொது பிரச்சி னைகளை நிறைவேற்ற வலியு றுத்தி 571 பேர் மனுக்களை அளித்தனர். மேலும் வாட்ஸ்அப் வழியாக 40 கோரிக்கைகளும், தொலைபேசி வழியாக 44 கோரிக் கைகளும் பெறப் பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.