

விழுப்புரம்- பாண்டி சாலையில் ஒரு சைக்கிள் விற்பனை கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிற்பகல் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மேஜை அறையில் இருந்த ரூ 1.73 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.