நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற அரசு கட்டுமானப் பணி : அமைச்சர் ஆய்வு செய்ய கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில்  தரமற்ற அரசு கட்டுமானப் பணி : அமைச்சர் ஆய்வு செய்ய கோரிக்கை
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் தரமற்ற அரசு கட்டுமானங்கள் குறித்து அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்ய வேண்டுமென கொமதேக கோரிக்கை விடுத் துள்ளது.

இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டும் தருவாயி லேயே இடிந்து விழுந்திருப்பது அரசு கட்டிடங்கள் கட்டப்படும் தரத்தை எடுத்துரைக்கிறது. மக்கள் உயிர்காக்கும் மருத்து வமனையினுடைய கட்டிடமே இடிந்து விழுந்து பல பேருக்கு காயத்தை ஏற்படுத்தி இருப்பது வேதனையளிக்கிறது. இந்த உண்மையை மறைத்து, தரம் குறைவாக இருந்ததால், நாங்களே இடித்துவிட்டோம் என அமைச்சர் தங்கமணி சொல்லியிருப்பதைக் கேட்டு மக்கள் நகைக்கின்றனர்.

ஒப்பந்ததாரரின் பொறி யாளர்கள் மற்றும் அரசு பொறி யாளர்களுடைய கவனக்குறைவே கட்டிடம் இடிந்து விழுவதற்கு காரணம். கவனக்குறைவான அதிகாரிகள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால், இதற்கு பிறகு நடக்கின்ற பணிகளிலாவது கவனத்தோடு அவர்கள் செயல்படுவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் போடப்படுகின்ற பல ஊராட்சி சாலைகள், அரசு கட்டிடங்கள், உயர்நிலை தண்ணீர் தொட்டிகள், மதில் சுவர்கள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்தும் தரம் குறைவாக கட்டப்படுகின்றன. அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் இரண்டு நாள் நடந்த ஆய்வில் 28 அரசு திட்டங்கள் தரம் குறைவாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை அமைச்சர் இல்லையென்று மறுத்தால், எங்கள் கட்சி எம்பி மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வு செய்ய வருவாரா என கேள்வி எழுப்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in