கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை
Updated on
1 min read

கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர் களின் கல்லறையில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

கல்லறை திருநாளை முன் னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சூசையப்பர் கல்லறைத் தோட்டம், வியாகு லமாதா கல்லறைத் தோட்டம், திருஇருதய ஆண்டவர் கல்லறைத் தோட்டம், மிஷின் தெருவில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் உள்ள தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் நேற்று சமூக இடைவெளியோடு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதையொட்டி, கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர், மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர். மேலும் இனிப்பு, பழங்கள் ஆகிய வற்றை வைத்து படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி வைத்தனர்.

தஞ்சாவூர் திருஇருதய ஆண் டவர் கல்லறைத் தோட்டத்தில், இறந்த குருக்களின் கல்லறைகளில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் சிறப்பு வழிபாடு செய்தார். வழக்க மாக பூக்காரத் தெரு தூய இருதய ஆண்டவர் பேராலயம், வியாகுலமாத பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் கரோனா தொற்று முன்னெச் சரிக்கை நடவடிக்கையின் காரண மாக நேற்று ரத்து செய்யப்பட்டது.

கும்பகோணத்தில்...

வேளாங்கண்ணியில்...

வேளாங்கண்ணி அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் மாதா குளம் அருகே உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் ஏராளமானோர் மெழுகுவத்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.

திருச்சியில்...

இதேபோல, அரியலூர், பெரம் பலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து, தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகு வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in