கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் விளைநிலங்கள் நடுவே குவாரி அமைக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே விளை நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தெற்கு இலந்தைகுளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே விளை நிலங்களுக்கு மத்தியில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தெற்கு இலந்தைகுளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து வருகின்றனர்.

கல் குவாரி

கயத்தாறு வட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருகிறோம். மக்காச்சோளம், சிறுகிழங்கு, சீனிக்கிழங்கு, சீனிஅவரை மற்றும் பட்டஅவரை போன்ற காய்கறி பயிர்களும், பழமரங்களும் பயிரிட்டு உள்ளோம்.

எங்களது விவசாய நிலங்களுக்கு மத்தியில் சிலர் சரள் குவாரி மற்றும் கல் குவாரி நடத்த அனுமதி கோரி இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தில் குவாரிக்கு அனுமதி அளித்தால் விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்களுக்கு செல்லும் மாடுகள் பாதிக்கப்படக் கூடும். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, அப்பகுதியில் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது எனக் கூறியுள்ளனர்.

இடஒதுக்கீடு

சாலை வசதி

எட்டயபுரம் தாலுகா மாவில்பட்டி ஊராட்சியைசேர்ந்த விஸ்வகர்ம சமுதாய மக்கள் பிச்சைபெருமாள் தலைமையில் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் மயானச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதற்காக 2 முறை அரசுநிதி ஒதுக்கியும், சாலை அமைக்கப்படவில்லை. எனவே, பொதுமயானச் சாலை, ஆதிதிராவிட பொதுமயானச் சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in