கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.30.5 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் சம்பத் நிவாரண நிதி வழங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் சம்பத் நிவாரண நிதி வழங்கினார்.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடந்த நிழ்வில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதிமற்றும் பிரதமரின் தேசிய நிவா ரண நிதியிலிருந்து ரூ.30.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சம்பத் நேற்று முன்தினம் வழங் கினார்.

விருத்தாசலம் வட்டம் அம்மேரிகிராமத்தில் 01.07.2020 அன்று என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தவிபத்தில் உயிரிழந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் மற்றும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 5 நபர்களுக்கு தலாரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த 3 நபர்களுக்கு தலா ரூ.50ஆயிரமும் என 8 நபர்களுக்கு முதல் வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சர் சம்பத் வழங்கினார்.

மேலும், பண்ருட்டி வட்டம்கொட்டலாம்பாக்கம் கிராமத்தில் கடந்த 06.02.2020 அன்று மின் மாற்றியில் பழுது சரிபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்தி னருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து காட்டுமன் னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தில் 04.09.2020 அன்று பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 9 நபர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நபர் களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.18 லட்சத்துக்கான காசோலைஎன மொத்தம் ரூ.30 லட்சத்து50 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் சம்பத் பயணாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் சந்திரசேகர் சாகமூரி முன் னிலை வகித்தார். மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in