1996-ஐ போல 2021 தேர்தலிலும் திமுக அலை வீசும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி நம்பிக்கை

1996-ஐ போல 2021 தேர்தலிலும் திமுக அலை வீசும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி  நம்பிக்கை
Updated on
1 min read

1996-ஐ போல 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக அலை வீசும் என அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள பெரும்பாறை மலைக் கிராமத்தில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ திண்ணைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

திமுக ஆட்சி என்பது 100 சதவீதம் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஸ்டாலின் முதல்வராவதைத் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை. 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக ஆதரவு அலை வீசியது போல் 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக ஆதரவு அலை வீசும். 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்ததால் எம்.எல்.ஏ. நிதியில் மட்டுமே வளர்ச்சிப் பணிகளை தொகுதிக்குள் செய்ய முடிந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மலைக் கிராமப் பகுதிகளில் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆத்தூர் மேற்கு ஒன்றியச் செயலர் ராமன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஹேமலதா, மணலூர் ஊராட்சித் தலைவர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in