

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்நாடு தின விழா நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற இணையவழி சொற்பொழிவில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை தலைவர் முத்துசந்தானம் ‘ நாடும், மொழியும்’ எனும் தலைப்பில் பேசியதாவது: நாடு என்பது பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் பொருள்படுகிறது. நாடு குறித்து ஒரு அதிகாரத்தை இயற்றிய வள்ளுவர், வளம் மிகுந்த வயல் நிறைந்த பகுதி நாடு எனக் குறிப்பிடுகிறார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதியார் பாடியுள்ளார். இன்றைய சூழலில் நல்ல தமிழில் ஊர்ப் பெயர்களை மாற்ற வேண்டும். இவ்வறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரி துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.