ரேஷன் கடை பணியாளர் சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ரேஷன் கடை பணியாளர் சங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனுவில், பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும்.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய மாற்றத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதியக் குழு அமைத்து, வரும் டிசம்பர் இறுதிக்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத 5000 பணியாளர்களை நிபந்தனைகள் எதுவுமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின்போது, சங்க செயலாளர் நாகேஷ், பொருளாளர் நித்யானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in