முதியவர் கொலை: மகன்கள் தலைமறைவு

முதியவர் கொலை: மகன்கள் தலைமறைவு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(65). அப்பகுதியில் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு கென்னடி, ராஜா, இருதயராஜ் (34), சேகர் (28) ஆகிய மகன்களும், பாப்பாத்தி என்ற மகளும் உள்ளனர்.

காமராஜுக்கு பணகுடி பகுதியில் இரண்டேகால் சென்ட் இடம் இருந்தது. அந்த இடத்தை கென்னடிக்கு காமராஜ் உயில் எழுதி கொடுத்துள்ளார். இதற்கு மற்ற மகன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த நிலத்தை பிரித்து தரவேண்டும் என்று தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் கடையில் தூங்கிக் கொண்டிருந்த காமராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பணகுடி போலீஸில் கென்னடி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து இருதயராஜ், சேகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in