

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முருகன் (11), ஆதிமூலம் மகன் ரஞ்சித்(10) . இருவரும் அதே ஊர் பள்ளியில் முறையே 6ம் வகுப்பும், 5 ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
நேற்று முற்பகல் இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். இதனை அறிந்த மற்ற சிறார்கள் கூச்சலிட்டனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய 2 பேரையும் மீட்டனர். இதில் ரஞ்சித் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். உயிருக்கு போரா டிய நிலையில் மீட்கப்பட்ட முருகன்முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.