கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத் தூண் திருப்பத்தூர் அருகே நிலம் தானமாக வழங்கல்

கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத் தூண் திருப்பத்தூர் அருகே நிலம் தானமாக வழங்கல்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் அமைக்கப்பட உள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாசகம் மூலம் தமிழகத்தை உலகறியச் செய்த சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார் திருப்பத்தூர் அருகே பூங்குன்றம் நாடு எனக் கூறப்படும் மகிபாலன்பட்டியில் பிறந்தவர். அவரைக் கவுரவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் மகிபாலன்பட்டியில் நினைவுத் தூண் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. ஆனால், இடம் சரியாகத் தேர் வாகாத நிலையில், பூங்குன்ற நாட்டார், நகரத்தார் வசமிருந்த 10 சென்ட் இடம் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் அமைக்க அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது.

அதற்குரிய ஆவணம் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் வழங்கப்பட்டது. அப்போது தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் நாகராஜன், ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in