சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published on

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராசிபுரம் மெட்டாலாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பூவரசன் (23) என்பவருக்கும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஈஸ்வரன் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் சைல்டு லைன் அமைப்பினர் காவல் துறையினர் பாதுகாப்போடு பெண்ணின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்றும், இதை மீறி திருமணம் நடத்தினால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தனர். இதை யடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக உறுதியளித்தனர். இதன்பின்னர், சிறுமியை நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in