இந்திரா காந்தி நினைவு தினம்

இந்திரா காந்தி நினைவு தினம்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ பேராவூரணி ஆர்.சிங்காரம், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோ.அன்பரசன், பொருளாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோல காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் படத்துக்கு ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன், எம்எல்ஏக்கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன் உள்ளிட்டோர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். மும்மத பிரார்த்தனையும், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கரூர் ஜவஹர் பஜார் காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படத்துக்கு எம்.பி செ.ஜோதிமணி மாலை அணிவித்து, மலர் தூவி, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in