தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சசிகலா, மல்லிகா, அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் தீபக் தாமோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், செரஸ்தார் ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள், காவல் துறையினர் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்தனர். ஏஎஸ்பி்க்கள் கோபி, செல்வன், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னபூரணி, மாவட்ட குற்ற ஆவணக்கூடம் ஜெரால்டுவின், நிர்வாக அதிகாரி சுப்பையா, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மாரியப்பன், காவேரி, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in