சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published on

கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர் மட்டம், கடந்த மாதம் 25-ம் தேதி 80 அடியை கடந்தது.

விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு நீர்வரத்து இருந் ததால், அணையின் நீர்மட்டம், அடுத்த 4 நாட்களில் 5 அடியாக உயர்ந்தது. இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து திடீரென குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in