

திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த, அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்றத் தயார். நீட் தேர்வை அகற்றினால், ஜிஎஸ்டி தொகையை முழுமையாக தமிழகத்துக்கு வழங்கினால், மதச்சார்பற்ற அரசு என்று கூறினால் பாஜகவுடனும் கூட்டணி அமையலாம். பழனிசாமியையோ, ஸ்டாலினையோ முதல்வராக்க வேண்டும் என யாரும் விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அவரது ஆதரவு வாக்குகளும், நடுநிலையாளர் வாக்குகளும் மக்கள் நீதி மய்யத்துக்குத்தான் கிடைக்கும் என்றார்.