

பசும்பொன்னில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேற்று சென்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் மானாமதுரையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஆர்.செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்எல்ஏ நாகராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கருணா கரன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வீரப்பன், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் அசோகன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் கொத்தங்குளம் கருப்பையா, பாஸ்கரன், மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், தர், குணசேகரன், எம்.கோபி, ஈஸ்வரன், முருகன், சோணை ரவி, பழனிசாமி, அருள்ஸ்டீபன், சிவாஜி, செந்தில்நாதன், பெரிய சாமி, சரவணன், நகர் செயலாளர் விஜிபோஸ், இளைஞர் இளம் பெண் பாசறை மாவட்ட செய லாளர் பிரபு, முன்னாள் எம்எல்ஏ சோழன் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.