Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

தேவர் சிலைக்கு அமைச்சர், பல்வேறு கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்எல்ஏ போ.சின்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் நகரச் செயலாளர் கா.கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் வீ.முருகேசன், மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலாளர் பால்ராஜ், பாஜக சார்பில் வடக்கு மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, அமமுக தென்மண்டலப் பொறுப்பாளர் மாணிக்கராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில், 3-ம் மைல் பகுதி யில் அமைந்துள்ள தேவர் சிலை க்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் கீதாஜீவன் எம்எல்ஏ, காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ்.முரளிதரன், பாஜக சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் மற்றும் தென்காசி மலையான் தெருவில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, திமுக சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், உயர்நிலைக் குழு உறுப்பினர் சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி, பாஜக மாவட்டத் தலைவர் ராமராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் முத்துராம லிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா, நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன், திமுக சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வகாப், எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லட்சுமணன், அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பரமசிவஐயப்பன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மகாராஜன், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் முகமது அலி, பாமக சார்பில் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், தமாகா சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x