Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

முருகம்பாளையம் டாஸ்மாக் திறப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு 5 மணி நேரம் பெண்கள் காத்திருப்பு போராட்டம்

முருகம்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் சுமார் 5 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு முருகம்பாளையம் ஆசாரித்தோட்டம் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் ஏற்கெனவே உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு போராடி வருகிறோம். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை கட்டும்போதே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களின் உணர்வை மதிக்காமல் திறக்கப்பட்டுள்ளது.

ஆசாரித்தோட்டம் பகுதியில்டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை யடுத்து, மது அருந்துபவர்களின் கூடாரமாக இப்பகுதி மாறும் சூழல் உள்ளது. பள்ளி, கோயில்கள் மற்றும் குடியிருப்பு என அனைத்தும் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது, எதிர்காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். அனைத்து தரப்பும் பயன்படுத்தும் பாதையில் கடை திறக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முருகம்பாளையம் செல்லம் நகர், பெரியார் காலனி, அண்ணா நகர் மற்றும் சுடுகாடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதுடன், ஆசாரித்தோட்டம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையையும் உடனடியாகமூட வேண்டும். இதுதொடர்பாக ஒரு மாதத்தில் 7 கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தொடர்ந்து கடை திறந்தால் அடுத்தகட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று மாலை பெண்களிடம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உதவி டாஸ்மாக் மேலாளர், வரும் 2-ம் தேதிடாஸ்மாக் மேலாளரிடம் நேரில் பேச நேரம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x