

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க இந்த ஆண்டில் நீட் தேவையா என்ற சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கரூரில் நாளை (அக்.31) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நிகழாண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த அனைத்து தகவல் களையும் அளிக்கும் நோக்கத்துடன், சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் சார்பிலான கருத்தரங்கம் கரூர் 80 அடி சாலையில் உள்ள ஹோட்டல் ராயல் கிராண்டில் நாளை (அக்.31) மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து, மருத்துவர்களாக உருவாக்கி வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டண்ட்ஸ் நிறுவனர் முகமது கனி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், இந்தி யாவில் எழுதும் எப்எம்ஜி தேர்வுக்கான பயிற்சியை (ரூ.75,000) இலவசமாக லிம்ரா தன் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
கருத்தரங்கம் நடைபெறும் இடத்திலேயே பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்ப படிவங்களை பெற்று, மாணவரின் எம்பிபிஎஸ் இடத்தை உறுதி செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 99529 22333, 94457 83333 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.