தி.மலை மாவட்ட நலவாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தல்

தி.மலை மாவட்ட நலவாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தல்
Updated on
1 min read

தி.மலை மாவட்டத்தில் தொழி லாளர் நல வாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. நலவாரியங் களில் பதிவு செய்யப்பட்டு உறுப் பினர்களாக தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து உதவித் தொகை உட்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின் றன. நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்யவும், ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர் கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள www.tnuwwb.in என்ற இணையதள மூலம் சேவை வழங்கப்படுகிறது.

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும், இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி நலவாரியத்தில் உறுப்பினர்களாகபதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04175 - 220544 மற்றும் 9566281405 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in