

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மதுரை எல்லீஸ் நகரிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் வாகன காப்பகத்தில் அன்னதான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஐயப்ப சேவா சங்க மாநிலத் தலைவர் எம்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அன்னதான முகாமை தொடங்கி வைத்தார்.
ஐயப்ப சேவா சங்க மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன் , பொறுப்பாளர்கள் ஐ.குருசாமி, எம்.மனோகரன், வி.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.