Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

இசைப் பள்ளி சார்பில் - சேலத்தில் தமிழிசை விழா :

சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை மற்றும் மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் தமிழிசை விழா, இசைப் பள்ளியின் 24-வது ஆண்டு விழா மற்றும் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா தலைமை வகித்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். விழாவில், தமிழக திட்டக்குழு உறுப்பினர் பத்ம கலைமாமணி நர்த்தகி நடராஜின் தமிழிசை நடனம், ‘கூத்தும் மரபும்’ என்ற தலைப்பில் பத்ம கலைமாமணி சுப்ரமணியனின் நாதஸ்வர தவிலிசை, ‘லயமும் ஆலயமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையும் நடைபெற்றது. மேலும், மாவட்ட இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், நாகலட்சுமி ஜெயராமன் நினைவு அறக்கட்டளை சார்பில் இசைப் பள்ளியின் சிறந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மண்டல உதவி இயக்குநர் (கலைப்பண்பாட்டுத் துறை) ஹேமநாதன், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x