

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன்(55) கடந்த மாதம் 21-ம் தேதி ஆடு திருடிச் சென்றவர்களை பிடித்தபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம் தோகூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன்(19) மற்றும் சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது மனைவி நித்யா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஏ.அப்துல்காதர், தள்ளுபடி செய்தார்.