மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து :

மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து  :
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சிக்குப்பட்ட சில பகுதிகளில் நாளை (டிச.18) குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர்த் திட்ட நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் அளிக்கும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.18) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக மரக்கடை, விறகுப்பேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாபேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பாநகர், பாத்திமாநகர், கருமண்டபம், காஜாமலை காலனி, ராம்ஜிநகர், பிராட்டியூர், எ.புதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர், பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in