Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

ரூ.5,000 லஞ்சம் பெற்ற விஏஓவுக்கு : 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு :

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் கே.சீனிவாசன். இவர் வெடிக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகேசனின் சிட்டாவில் தவறுதலாக இருந்த நில அளவை சரிசெய்து கொடுப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ரூ.5,000 லஞ்சமாக பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 பிரிவுகளின் கீழ் ரூ.40,000 அபராதம், அதை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x