நெல்லையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தனி இடம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

நெல்லையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தனி இடம் :  மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 5-வது சித்தர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமைவகித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பேசியதாவது:

கரோனா தொற்று காலத்தில் இந்த சித்த மருத்துவக் கல்லூரி சிறப்பாக பணியாற்றியது. கரோனா தொற்று முதலில் ஏற்பட்டபோது தடுப்பூசி இல்லாத நிலையில் தொற்றுக்கு சித்த மருந்துகள் சிறப்பான நிவாரணமாக இருந்தது. கரோனாவின் அடுத்த உருவான ஒமைக்ரான் தமிழகத்துக்கு வந்துவிட்ட நிலையில் சித்த மருத்துவ த்தில் நிவாரணம் தேட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் கூடுதல் இடவசதியுள்ள வேறுஇடத் தில் செயல்பட மாநில அரசின் அனுமதி யுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேவையான இடத்தை வழங்க வும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி, துணை முதல்வர் மனோகரன், சித்த மருத்துவ ஆராய்ச்சி அலுவலர்கள் சிவரஞ்சனி, ஹரிஹரமகாதேவன், சுபாஷ் சந்திரன் மற்றும் சித்த மருத்துவ அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in