Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

நெல்லையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறிய Telegram Channel -ல் இணைந்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x