Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

திருப்பத்தூர் பகுதியில் நாளை மின்தடை :

திருப்பத்துார் மின் பகிர்மான வட்டம், திருப்பத்துார் மின் கோட்டத்தைச் சேர்ந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

அதனால், 18-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்துார் நகரம், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மடவாளம், மாடப்பள்ளி, செளந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், நத்தனம் காலேஜ், கந்திலி, மொளகாரன் பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தாகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், கருப்பனுார், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதுார் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதுபுரம், செட்டேரி அணை, சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம், கொரட்டி, சுந்தரம்பள்ளி, பேராம்பட்டு காக்கங்கரை, கண்ணாலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின் கோட்ட செயற் பொறியாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி..

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், வாணியம்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங்காயம், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, திம்மாம் பேட்டை, வாணியம்பாடி, கேத் தாண்டப்பட்டி, பச்சூர் உள்ளிட்ட 8 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளன.

அதனால், 18-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாணியம்பாடி நியு டவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெரு மாள் பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், குருமதெரு, பெத்தவேப்பம்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், வெள்ளக்குட்டை, கொர்ணாம்பட்டி, குரும்பட்டி, கொத்தக்கோட்டை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்எம்எஸ், புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம், ஜோலார்பேட்டை, குடியான குப்பம், ராமரெட்டியூர், சிக் கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம் பேட்டை, புத்துக்கோயில், பெத்த கல்லுப்பள்ளி, பெரியமோட்டூர், சுகர்மில், கேத் தாண்டப்பட்டி, நாட்றாம்பள்ளி, அதிபெரமனூர், கத்தாரி, மல்லகுண்டா, தாசரியப் பனூர், பச்சூர், கொத்தூர், காந்தி நகர், கண்டம்பட்டி, டோல்கேட், பழைய பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வாணியம்பாடி மின் கோட்ட செயற் பொறியாளர் பாட்சாமுகமது தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x