

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் பிரபல ஜவுளிக்கடை அருகில் தேநீர் கடை ஒன்று உள்ளது.
வழக்கம்போல் ஊழியர்கள் நேற்று காலை கடையை திறக்க வந்தனர். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
அதில், இந்த கடையின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 25 பண்டல் பீடி, சிகரெட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வடக்கு காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.