இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் தலைவராக -  கோவையைச் சேர்ந்த டாக்டர் பழனிசாமி பதவியேற்பு :

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் தலைவராக - கோவையைச் சேர்ந்த டாக்டர் பழனிசாமி பதவியேற்பு :

Published on

இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தமிழ்நாடு மாநில கிளையின் 68-வது தலைவராக கோவையைச் சேர்ந்த டாக்டர் ஆர்.பழனிசாமி பதவியேற்றுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக கிளையில் 40 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கோவையில் நடந்த இச்சங்கத்தின் மாநில மாநாட்டில் 2022-ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் ஆர்.பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவர் ஏற்புரையாற்றி பேசும்போது, “மக்களுக்கான சுகாதார திட்டங்களில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி ஒத்துழைப்பு அளிக்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றியபோது உயிர்த்தியாகம் செய்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி பெற்றுத்தரப்படும். மருத்துவ சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்வில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால், முன்னாள் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in