

வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹபீப்ரகு மான்(46). இவரது மனைவி ராதியா. இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதில் ஹபீப்ரகுமான் மனைவி ராதியாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். ஹபீப்ரகுமானை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி புருஷோத் தமன் தீர்ப்பு வழங்கினர். இதில் மனைவியைக் கொலை செய்த ஹபீப்ரகுமானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப் பளித்தார்.