Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் சிங்கம்புணரியில் உழவர் சந்தை மூடல் :

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கொட்டாம்பட்டி சாலையில் 2011-ல் தொடக்கத்தில் 20 கடைகளுடன் உழவர்சந்தை கட்டப்பட்டது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் உழவர்சந்தை திறப்பு விழா நடக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து 10 ஆண்டு களுக்குப் பிறகு கடந்த ஜன.25-ல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. 23 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

அதேநேரம், மேலூர் சாலையில் சாலையோர காய்கறி கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோரக் கடைகளில் காய்கறி வாங்குகின்றனர். இதையடுத்து உழவர் சந்தையில் கடை நடத்த அனுமதி பெற்ற விவசாயிகளும் சாலையோரத்திலேயே கடைகளை அமைத்து விற்பனை செய்கின்றனர். சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துமாறு வேளாண் வணிகத் துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் குத்தகைதாரருக்கு கட்டண வசூல் பாதிக்கும் என்பதால், சாலையோர கடைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உழவர்சந்தை திறந்த சில வாரங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால்தான் உழவர் சந்தை செயல்படவில்லை என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x