

நேற்று காலை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அருகே பவநகர் ஸ்டேடியத்தில் உமையாள் ராமநாதனின் உடல் வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மாங்குடி எம்எல்ஏ, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், கருப்புச்சாமி மற்றும் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பிறகு அழகப்பச் செட்டியாரின் நினைவிடம் அருகே அம்மையாரின் உடல் எரியூட்டப்பட்டது.