

மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு, எஸ்.எஸ்.காலனி பகுதி யில் வீடு ஒன்றில் குட்கா பதுக்கி இருப்பது தெரியவந்தது. போலீஸார் அவற்றை கைப்பற்றி வீட்டை சீல் வைத்தனர்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை ஒப்படைக்கக் கோரி நீதிமன்ற உத்தரவு பெற்றார். இதன்படி, வீட்டை ஒப்படைக்க போலீஸார் ஏற்பாடு செய்தனர். வீட்டை ஆய்வு செய்தபோது, ஏற் கெனவே கைப்பற்றிய ரூ.1,98,000 மதிப்புள்ள 1,080 கிலோ குட்கா பொருட்கள் பூட்டிய வீட்டில் இருந்தபோது திருடுபோனது தெரியவந்தது.
உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸார் விசாரிக்கின்றனர்.